குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு; நீதிமன்றம் உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி

2020 பிப். 9 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவில் இருந்தும் விலக்கு தர முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஜனவரி 2020-ல் குரூப் 1 தேர்வுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மீண்டும் ஐகோர்ட்டு உத்தரவின்படி குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

  Also read: தமிழகத்தில் தற்போதுள்ள பாடத்திட்டம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு இணையாக உள்ளது; அமைச்சர் அன்பில் மகேஷ்

  இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 2020 பிப். 9 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவில் இருந்தும் விலக்கு தர முடியாது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை முறைகேடாக பெற்று வேலைக்கு சேர்கின்றனர் அது குறித்து தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

  மேலும் 2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து 1 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த டிஎன்பிஎஸ்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
  Published by:Esakki Raja
  First published: