தமிழகத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சட்டமன்றம்

திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலா வளர்ச்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், 8 மாவட்ட ஆட்சியர்கள், வேறு துறைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று (ஜூன் 13) வெளியிட்ட உத்தரவில்,

    1. நாகை ஆட்சியராக இருந்த பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சித்துறை பஞ்சாயத்து ராஜ் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    2. விழுப்புரம் ஆட்சியராக இருந்த அண்ணாதுரை வேளாண்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    3. வேலூர் ஆட்சியராக இருந்த சண்முகசுந்தர் கூட்டுறவு வங்கி பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    4. திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி சுற்றுலா வளர்ச்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    5. திருப்பத்தூர் ஆட்சியராக இருந்த சிவனருள், பதிவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    6. கோவை ஆட்சியராக இருந்த நாகராஜன், நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    7. அரியலூர் ஆட்சியராக இருந்த ரத்னா, சமூகநலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    8. திருவள்ளூர் ஆட்சியராக இருந்த பெண்ணையா, நகராட்சி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும், சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளராக அன்ஷூல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குநராக சரவணவேல் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

     
    Published by:Esakki Raja
    First published: