Home /News /tamil-nadu /

திருமணமான 20 நாளில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

திருமணமான 20 நாளில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

புது மாப்பிள்ளை தற்கொலை

புது மாப்பிள்ளை தற்கொலை

Chennai : போதை பழக்கத்தை கண்டித்ததால் சென்னை ஆதம்பாக்கத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டார்.

    சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் விஜயன் (29) கால் டாக்ஸி ஓட்டுநரான இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் புது மாப்பிள்ளையான விஜயன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு அக்கா வீட்டிற்கு விருந்துக்குச் சென்றுள்ளார்.

    விருந்துக்கு சென்ற இடத்திலும் மது போதையில் தள்ளாடி கொண்டு இருந்துள்ளார். திருமணம் ஆகியும் மது பழக்கத்தை விடவில்லை என்று விஜயனின் அக்கா கண்டித்துள்ளார். அதில் கோபமான அவர் அவரது மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் படுக்கை அறைக்கு சென்று கதவை உள் தாழிட்டுக் கொண்டார்.

    வெகுநேரமாகியும் விஜயன் வெளியே வராததால் கதவைத் தட்டியும் திறக்காததால் விஜயனின் உறவினர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் விஜயனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Must Read : பெரியாரை பின்பற்றுபவர்கள் மட்டும் திராவிடர்கள் அல்ல.. அம்பேத்கரும் திராவிடரே - திருமாவளவன்

    திருமணமாகி 20 நாட்களே ஆன புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - சுரேஷ்.




    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai, Crime News, Suicide

    அடுத்த செய்தி