ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கும் 20 சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கும் 20 சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு (கோப்புப் படம்)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு (கோப்புப் படம்)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்சிச் சூடு வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி சரவணனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், மெஹுல் சோக்சி, நீரவ் மோடி உள்ளிட்டோர் தொடர்புடைய மும்பை வங்கி மோசடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும்  அதிகாரி சரவணன் உட்பட 20 சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அலோக் வர்மா பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் 20 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்து நாகேஸ்வரராவ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 2-ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கை விசாரித்து வரும் விவேக் ப்ரியதர்ஷினி, சத்தீஸ்கர் சிறப்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரி ராம் கோபால் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்சிச் சூடு வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி சரவணனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், மெஹுல் சோக்சி, நீரவ் மோடி உள்ளிட்டோர் தொடர்புடைய மும்பை வங்கி மோசடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இருந்த போதும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கை சரவணனனே தொடர்ந்து விசாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சிபிஐ இடைக்கால தலைவராக நாகேஸ்வர ராவ் நியமனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் தொடர்ந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: CBI, Lok Sabha Key Constituency