உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் விஷால் (24). தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். நேற்றிரவு சைக்கிளில் கிண்டி அம்பாள் நகர் சிக்னல் அருகே செல்லும்போது, பைக்கில் அதிவேகமாக வந்த நபர் விஷால் மீது மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே விஷால் இறந்து போனார்.
தகவல் அறிந்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வந்து விஷால் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Also see:
பைக் ஓட்டி வந்த நபரும் படுகாயத்துடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பலனளிக்காமல் அவரும் இறந்துபோனார். விசாரணையில் அவர் ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த பிலால் (25) எனத் தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.