நாகை: ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை போராடி மீட்பு

நாகை: ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை போராடி மீட்பு
மீட்கப்பட்ட குழந்தை சிவதர்ஷினி.
  • News18
  • Last Updated: September 23, 2018, 9:48 PM IST
  • Share this:
நாகை மாவட்டம் புதுப்பள்ளி கிராமத்தில், ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை, இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பின், பத்திரமாக மீட்கப்பட்டார்.

புதுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்பவரது வீட்டருகே, குடிநீருக்காக, 15 அடி ஆழ ஆழ்குழாய் கிணறு தோண்டப்பட்டுள்ளது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தையான சிவதர்ஷினி, எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார்.

தகவலறிந்த வேளாங்கண்ணியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், இரண்டு வாகனங்களில் விரைந்து சென்றனர். முதற்கட்டமாகக் குழந்தைக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜேசிபி வாகன உதவியுடன், ஆழ்குழாய் கிணற்றை சுற்றி, பெரிய குழி தோண்டப்பட்டது. அதில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் பக்கவாட்டில் ஒரு குழி தோண்டி சுமார் இரண்டரை மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு குழந்தை சிவதர்ஷினியை மீட்டனர்.


வெகுநேரமாக போராடி குழந்தையை மீட்ட தீயணைப்பு வீரர்களை மக்கள் கைதட்டி பாராட்டினர். இதனையடுத்து சிகிச்சைக்காக, நாகை அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துள்ளனர்.
First published: September 23, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்