முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தென்னந்தோப்பில் பெண் குழந்தை.. நரபலிக்காக மந்திரவாதி நடத்திய பூஜை.. கடைசி நிமிடத்தில் மீட்கப்பட்ட பரபர சம்பவம்!

தென்னந்தோப்பில் பெண் குழந்தை.. நரபலிக்காக மந்திரவாதி நடத்திய பூஜை.. கடைசி நிமிடத்தில் மீட்கப்பட்ட பரபர சம்பவம்!

குழந்தை மீட்பு

குழந்தை மீட்பு

Child kidnapped for human sacrifice | வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் காரகொண்டான்விளை தென்னந்தோப்பில் உள்ள வீட்டில் குழந்தையின் அழு குரல் கேட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari, India

நாகர்கோவிலைச் சேர்ந்த கண்ணன் - அகிலா தம்பதியின் 2 வயது மகள் சஸ்விகா. அங்குள்ள மணலி பகுதியில் தனது தாத்தா வீட்டு முற்றத்தில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார். புகாரின் பேரில் அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்திருக்கலாமோ என்ற சந்தேகத்திலும் தேடப்பட்டது.

தொடர்ந்து அருகில் உள்ள பகுதிகளிலும் காவல் துறையினர் வலைவீசி தேடினர். இரவு 8 மணியளவில் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் காரகொண்டான்விளை தென்னந்தோப்பில் உள்ள வீட்டில் குழந்தையின் அழு குரல் கேட்டது. உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையை வைத்து முதியவர் ஒருவர் பூஜை செய்துகொண்டிருந்தார். அவரிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டது.

பின்னர், காவலர்கள் அவரை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின. குழந்தையை கடத்தியவர் 68-வயதான ராசப்பன் என்பதும், தனது வீட்டில் பூஜை அறை வைத்து மாந்திரீக தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் குழந்தை சஸ்விகாவை கடத்திச் சென்று நகைகளை பறித்துக்கொண்டு, நரபலி கொடுக்க திட்டமிட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார்.  இதையடுத்து, அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Human Sacrifice, Kanniyakumari