மைனர் மகள்களை கடைக்காரரின் காம இச்சைக்கு தாரைவார்த்த தாய் - சிக்கிய 50 வீடியோக்கள்!

rape

அவ்வப்போது அந்த கடையில் பொருட்கள் வாங்கிக்கொள்வதற்கும், பெருமாளிடம் இருந்து அடிக்கடி பணம் பெறுவதற்கும் பிரதி பலனாகவே பெருமாளின் லீலைகளை சிறுமியின் தாயார் ஆதரித்து கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்.

  • Share this:
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், கடைக்காரரின் மொபைலில் 50க்கும் மேற்பட்ட சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் இருப்பதை பார்த்து அதிர்ந்துள்ளனர். தாயின் அனுமதியுடன், அவரின் மகளையும் மேலும் 4 சிறுமிகளையும் கடைக்காரர் பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்திருக்கிறார். கடையில் இலவசமாக பொருட்கள் வாங்குவதற்கு பிரதி பலனாக சிறுமியை அவரின் தாயின் அனுமதியுடனே பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார் அந்த கடைக்காரர்.

சென்னை ஆர்வி நகர் 1 வது தெரு பகுதியில் மாரியம்மன் கூல் பார் என்ற பெயரில் பெட்டி கடை நடத்தி வருபவர் பெருமாள்(48). இந்தக் கடையில்,  தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் அந்த கடையை சோதனையிட சென்றிருக்கின்றனர்.

அப்போது கடைக்காரரான பெருமாள் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், இவருக்கு யார் மூலம் குட்கா கிடைக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக கடைக்காரரின் மொபைல் போனை போலீசார் வாங்கிப் பார்த்துள்ளனர். எதேச்சையாக மொபைல் கேலரியை பார்த்த போது அதில் எக்கச்சக்கமான சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் இருப்பதை பார்த்திருக்கின்றனர்.

முதலில், ஏதோ ஆபாச படங்களை பதிவிறக்கி வைத்திருப்பதாகவே போலீசார் நினைத்தனர். அனால், அந்த வீடியோக்களில் பெருமாள் இருப்பதை பார்த்து போலீசார் திகைத்திருக்கின்றனர். மேற்கொண்டு கடைக்காரர் பெருமாளை விசாரித்த போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்திருக்கின்றனர்.

Also Read: தலித் தம்பதியினர் மைனர் மகளுடன் மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்!

சிறுமியின் 30 வயது தாய் பெருமாளுடன் கடந்த 2 வருடமாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததுள்ளார். பின்னர் அந்த 30 வயது பெண்ணின் சகோதரியான 28 வயது பெண்ணுடனும் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.அப்போது அப்பெண் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த பெருமாள், அப்பெண்ணின் 9 வயது மகளிடன் பாசமாக பழகியிருக்கிறார். அதன் பிறகு அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இது குறித்து தனது தாயிடம் சிறுமி தெரிவித்த போது அவருடைய தாய் இதனை கண்டுகொள்ளவில்லை. அவ்வப்போது அந்த கடையில் பொருட்கள் வாங்கிக்கொள்வதற்கும், பெருமாளிடம் இருந்து அடிக்கடி பணம் பெறுவதற்கும் பிரதி பலனாகவே பெருமாளின் லீலைகளை சிறுமியின் தாயார் ஆதரித்து கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்.

Also Read:  சீனாவுடன் நட்புக்கு பாகிஸ்தானுக்கு உதவப்போகும் கழுதைகள்!

இதையடுத்து சிறுமியின் தாயுடைய சகோதரியின் மைனர் மகளுக்கும் பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். பெருமாளின் பாலியல் சீண்டல்கள் எல்லை மீறி சிறுமியின்  வீட்டுக்கு வரும் சிறுமியின் தோழிகளான 11 வயது மற்றும் 4 வயது சிறுமிகளையும் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். மேலும், விசாரணையில் அந்த நபருடன் தொடர்பில் இருந்த பெண்ணின் 9 வயது மகள் அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி முதல் 17 வயது சிறுமி வரை 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

மேலும் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோக்களாகவும் எடுத்து வைத்திருக்கிறார். சிறுமிகளின் தோழிகள் மிகவும் வயதில் குறைந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை விரிவாக பெறோர்களிடம் சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு பக்குவம் இருக்கவில்லை. மேலும் சிறுமிகளை பாலியியல் கொடுமை செய்வதற்கு 500 முதல் 2,000 ரூபாய் வரை கொடுத்தது தெரியவந்தது.

பெருமாளின் மொபைலில் 50க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதை பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 5 சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்து வீடியோக்கள் எடுத்து வைத்திருந்த கடைக்காரர் பெருமாள், அவருக்கு உடந்தையாக இருந்த இரு சிறுமிகளின் தாய்மார்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யதார்தமாக போலீசார் மட்டும் இந்த வீடியோக்களை பார்த்திருக்காவிட்டால் இப்படிப்பட்ட ஒரு கொடூர சம்பவம் வெளியுலகுக்கு தெரியாமலே போயிருக்கக் கூடும். இச்சம்பவம் டி.பி.சத்திரம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அப்பகுதியில் குளிர்பானக் கடை நடத்தி வரும் பெருமாள் அமைதியானவர் போல தன்னை காட்டி கொண்டு குழந்தைகளிடம் அன்பாக பழகுவது போல் நடித்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை செய்துவந்துள்ளார். பெருமாள் மீதும், உடந்தையாக இருந்த பெண்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Arun
First published: