• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சொத்தை ஏமாற்றிய மகன்கள்: ஜீவனாம்சம் கேட்டு பெற்றோர்கள் மனு

சொத்தை ஏமாற்றிய மகன்கள்: ஜீவனாம்சம் கேட்டு பெற்றோர்கள் மனு

கிருஷ்ணமூர்த்தி - கொளஞ்சியம்

கிருஷ்ணமூர்த்தி - கொளஞ்சியம்

கடலூர் மாவட்டத்தில் மகன்களால் ஏமாற்றப்பட்ட பெற்றோர்களின் மனுக்களை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், விசாரணையை விரைந்து நடத்த உத்தரவிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மகன்கள் சொத்தை ஏமாற்றி பெற்றோர்களை வீட்டை விட்டு வெளியேற்றியதால் ஜீவனாம்சம் கேட்டு 2 பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கொளஞ்சி தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் சுமார் 80 லட்சம் மதிப்பிலான வீட்டை கட்டியுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 மகன்களுக்கும் திருமணம் செய்து வைத்து,  வீட்டையும் பிரித்து கொடுத்துள்ளனர். ஆனால் வீட்டின் பத்திரம் என்பது பெற்றோர்கள் பெயரில் இருந்த நிலையில் மகன்கள் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் 2 வீட்டுக்கான பத்திரத்தை அவர்கள் பெயரில் மாற்றி எழுதி சொத்தை அபகரித்துக் கொண்டனர்.

இந்நிலையில் மகன்கள் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் சொத்தை அபகரித்ததோடு அவர்களை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். அதனால் தங்க இடமில்லாமல் அவர்கள்  வாடகை வீட்டில் தங்கி வருகின்றனர். இந்த நிலையில் தங்கள் பிள்ளைகள் சொத்துகளை அபகரித்து விட்டதாகவும், தங்களுக்கு தங்க வீடு இல்லை என்பதால் முதியோர் இல்லத்தில் தங்கி வருவதாகவும் புகார் அளித்துள்ளனர். மேலும் மாதந்தோறும் 2000 ரூபாய் தருவதாக மகன்கள் கூறினர். ஆனால் இருவருமே அதையும் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே தங்களுக்கு தங்குவதற்கு வீடு வழங்கக் கோரியும்  வாழ்வாதாரத்திற்காக ஜீவனாம்சம் வழங்க கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு கொடுத்தனர்.

இதேபோல் குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த சின்னபொண்ணு குப்புசாமி என்ற தம்பதிக்கு 3 மகன்கள் இருந்துள்ளனர். சின்னபொண்ணுவின் கணவர் குப்புசாமி இறந்துவிட்டார். இந்நிலையில் பெற்ற மகன்களை நம்பி இருந்த சின்னபொண்ணு பெயரில் இருந்த ஒரு வீட்டை  அவரது மகன்கள் அவருக்கு தெரியாமல் அபகரித்துள்ளனர். இதனால் தங்க இடமில்லாமலும் ஜீவனாம்சம் கேட்டு சின்னபொண்ணு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மனு கொடுத்தார்.

சின்னபொண்ணு


இவர்கள் இருவரின் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சொத்தை ஏமாற்றிய மகன்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

Also see... டிவி நிகழ்ச்சியில் பாஜக - சமாஜ்வாதி இடையே கைகலப்பு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: