Vaccination : தமிழகத்தில் ஒரே நாளில் 2.58 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி... 6.16 லட்சம் தடுப்பூசிகள் இன்று வருகை

கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் ஒரே நாளில் 2.58 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆரம்பக்கட்டத்தில் மக்கள் மத்தியில் தயக்கம் காணப்பட்ட நிலையில், அரசின் விழிப்புணர்வு நடவடிக்கை காரணமாக அடுத்து தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் நேற்று 2,327 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 701 பேர் தடுப்பூசி போட்டப்பட்டு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அந்த வகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 68,734 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 26,983 முதியவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்கள் 853 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 2,114 பேருக்கும், 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 1,60,017 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 5 லட்சத்து 97 ஆயிரத்து 418 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையில் இதுவரை 9 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி அதிக அளவில் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இதையடுத்து மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து கடந்த 11ஆம் தேதி 3.65 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்தன. அவை தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

    Must Read ; தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலையை கட்டுப்படுத்தி வெற்றி பெற்றுள்ளோம் - தயாநிதி மாறன்

    இந்நிலையில், இன்று மேலும் 6.16 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வரவுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 20 கோவேக்சின் தடுப்பூசிகளும், புனேயில் இருந்து 4 லட்சத்து 97 ஆயிரத்து 640 கோவிஷீல்டு தடுப்பூசிகளும் இன்று தமிழகம் வரவுள்ளது. இந்த தடுப்பூசிகள் தமிழகம் முழுவதும் பிரித்து அனுப்பப்பப்பட்டு, தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் தட்டுப்பாடு இல்லாமல் செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டவுள்ளது.
    Published by:Suresh V
    First published: