நாகையில் கந்துவட்டி கொடுமை ; பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 2 பேர் தற்கொலை

கந்துவட்டி கொடுமையால் நாகையில் இரண்டு பெட்ரோல் பங்கின் ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகையில் கந்துவட்டி கொடுமை ; பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 2 பேர் தற்கொலை
கந்துவட்டியால் உயிரிழந்த 2 பேர்
  • Share this:
கந்துவட்டி கொடுமையால் தமிழகத்தில் தற்கொலைகள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. அதன்படி நாகையில் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த ஊழியர்கள் இருவர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா நம்பிவயல் காட்டாத்தியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(32). அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் முருகேசன்(28). இவர்கள் இரண்டு பேரும் நாகை அருகே திருமருகல் யூனியன் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கலியபெருமாள் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்துவந்த முருகேசனும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஆனந்தனும் பங்கின் மொத்த வரவு செலவு கணக்குகளையும் பார்த்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வரவு செலவு கணக்கில் சுமார் ரூபாய் 8 லட்சத்திற்கான கணக்கு இல்லாததால், திருமருகல் பகுதியை சேர்ந்த சில கந்துவட்டி கும்பலிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருவரும் சமாளித்து வந்துள்ளனர்.


தொடர்ந்து கணக்கில் வராத தொகையை இருவரும் ஒப்புகொள்வதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உரிமையாளர் கலியபெருமாளிடம் ஜூன் மாதம் தருவதாக கூறி எழுதி கொடுத்து பணியாற்றி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்ற ஆனந்தன் கடந்த 2-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளர் கலியபெருமாள் திட்டச்சேரி காவல்நிலையத்தில் நேற்று இரவு முருகேசனை அழைத்து வந்து புகார் அளித்ததாகவும், முழு தொகையையும் முருகேசனை ஒப்புகொள்ளும்படி போலீசாரை வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து இருந்த முருகேசன் மொத்த தொகையும் தான் கொடுக்க வேண்டும் அச்சத்திலும், ஆனந்தன் உயிரிழந்த சோகத்திலும் பெட்ரோல் பங்கில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இருவரது உறவினர்களும் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், கந்துவட்டி கும்பலால் தொடர்ந்து மிரட்டப்பட்டு உயிரிழப்பு நடந்துள்ளதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ள திட்டச்சேரி போலீசார், புதுக்கோட்டை மாவட்டத்தில் இறந்துபோன ஆனந்தன், முருகேசன் ஆகிய இரண்டு பேரும் பணி செய்யும் இடத்தில் உரிமையாளர் மற்றும் கந்துவட்டி கும்பலிடம் கடன் வாங்கி உயிரிழந்து உள்ளார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? போன்ற பல்வேறு கோணத்தில் நாகை டிஎஸ்பி முருகவேல் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் உயிரிழந்த முருகேசன் கந்துவட்டி கும்பல் குறித்தும், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய வட்டிபணத்தின் வரவு செலவு கணக்குகள் குறித்தும் காகிதத்தில் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெட்ரோல் பங்கின் சுரேஷ்குமாருக்கும் கந்துவட்டி கும்பல் குறித்து பல விஷயங்கள் தெரியும் என்றும், பங்கின் உரிமையாளரிடம் போலீசார் முறையான விசாரணை நடத்தவில்லை என்றும், உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கந்துவட்டி கொடுமையால் நாகையில் இரண்டு பெட்ரோல் பங்கின் ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

மின் கட்டணத்தில் குளறுபடிகள் இருக்கும் என நினைத்தால் புகார் அளிக்க வேண்டும் : முன்னாள் மின்சாரத்துறை பணியாளர்

 
First published: June 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading