சென்னையில் மனைவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட கணவரை கல்லால் தாக்கிய 2 பேர் கைது..

சென்னையில் மனைவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட கணவரை கல்லால் தாக்கிய 2 பேர் கைது..

கோப்புப் படம்

சென்னையில் மனைவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட கணவரை கல்லால் அடித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 • Share this:
  அம்பத்தூர் மேனாம்பேடு இளங்கோ நகரைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் அவரது மனைவி, கைக்குழந்தை மற்றும் தம்பி சக்திவேல் ஆகியோருடன் நேற்று மாலை மேனாம்பேடு பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது , அங்கிருந்த 2 இளைஞர்கள் யுவராஜின் மனைவியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

  உடனே, யுவராஜ் அவர்களை தட்டிக் கேட்டுளார். அப்போது அந்த 2 இளைஞர்களும் யுவராஜ் மீது கல்லை எடுத்தெறிந்து காயம் உண்டாக்கி, யுவராஜ் மற்றும் அவரது மனைவியை கீழே பிடித்து தள்ளி தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

  இதனால் காயமடைந்த யுவராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  சம்பவ இடத்திற்கு சென்று அம்பத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளாக கருதப்பட்ட 2 இளைஞர்களையும் தீவிர தேடுதலில் ஈடுபட்டு தீபக் கார்த்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர் .

  மாநகராட்சி குப்பை லாரி மோதி இளம்பெண் தலைநசுங்கி உயிரிழப்பு.. (சிசிடிவி காட்சி)

  விசாரணையில் கைது செய்யப்பட்ட 2 நபர்களும் மதுபோதையில் இருந்ததும், யுவராஜின் மனைவியை கிண்டல் செய்ததுடன், கல்லால் தாக்கியும், கீழே தள்ளியும் காயம் ஏற்படுத்தியது தெரியவந்தது . விசாரணைக்குப் பின்னர் 2 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: