அரசு வேலை வாங்கி தருவதாக ₹2 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக நிர்வாகி மீது புகார்!

பாதிக்கப்பட்ட இளைஞர்கள் 2 பேரும் கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Web Desk | news18
Updated: July 10, 2019, 12:19 PM IST
அரசு வேலை வாங்கி தருவதாக ₹2 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக நிர்வாகி மீது புகார்!
பாதிக்கப்பட்ட இளைஞர்கள்
Web Desk | news18
Updated: July 10, 2019, 12:19 PM IST
ஈரோட்டில் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் ₹2 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக நிர்வாகி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோபி அருகே கவுந்தப்பாடியை சேர்ந்தவர் ராஜேஸ்குமார். இவர், கவுந்தப்பாடி 6- வது வார்டு அதிமுக நிர்வாகியாக உள்ளார். இவர் கடந்த 2 ஆண்டாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களிடம் நான் ஆளும்கட்சியில் உள்ளதால் அரசு வேலை வாங்கி தரமுடியும் எனக்கூறி பலரிடம் ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை வசூல் செய்துள்ளார்.

இதேபோல் சலங்கபாளையத்தை சேர்ந்த கோகுல், தினேஷ்வரன் ஆகியோரிடமும் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த ஆண்டு ரூ.2 லட்சம் வாங்கி உள்ளார். ஆனால் பணம் பெற்று ஓராண்டாகியும் வேலை வாங்கி தரவில்லை.

இதனால் கோகுல்  தினேஸ்வரன் இருவரும் நேற்று ராஜேஸ்குமார் வீட்டிற்கு சென்று கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளனர்.

கவுந்தப்பாடி காவல் நிலையம்


இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்குமார், அந்த இளைஞர்களை அடித்து உதைத்துள்ளார். அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இருவரும் கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த கவுந்தப்பாடி காவல் நிலைய போலீசார், புகார் கொடுக்க வந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்வதாக மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் பெற்றோருடன் வந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க... புலி படத்தை திட்டியவரை பார்ட்டி கொடுத்து பாராட்டினாரா விஜய்?

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...