அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்... நிவாரண தொகையை அதிகரிக்க மீனவர்கள் கோரிக்கை...!

மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தபோதிலும், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல எவ்வித தடையும் இல்லை. இதனால் அடுத்த 2 மாதங்களுக்கு மீன்களின் விலை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்... நிவாரண தொகையை அதிகரிக்க மீனவர்கள் கோரிக்கை...!
ராமேஸ்வரம் மீனவர்கள் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: April 16, 2019, 8:39 AM IST
  • Share this:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2 மாதங்களுக்கான மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, கிழக்கு கடலோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலங்களில் விசைப்படகில் சென்று மீன்பிடிப்பதற்கு, அரசு தடை விதித்து வருகிறது.

அதன்படி இந்தாண்டுக்கான மீன்பிடி தடைகாலம் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வந்தது. இன்று தொடங்கி - ஜுன் 15-ம் தேதிவரை, 2 மாதங்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதனால் திருவள்ளூர் மாவட்ட கடற்பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரை, 13 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், தங்களது விசைப்படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்

தூத்துக்குடியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று குமரி மாவட்டம் சின்னமுட்டம் துறைமுகத்திலும் 280 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படகுகளை பழுதுபார்க்கும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியிலும் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்துள்ள நிலையில், மீனவர்கள் எவரும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் தேங்காய்திட்டு துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. விசைப்படகுகள் அனைத்தும் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.இதனிடையே ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் எமிரிட், அரசு வழங்கும் மீன்பிடி தடைகால நிவாரண தொகை 5000 ரூபாய் போதுமானதாக இல்லை என குறிப்பிட்டார். வாழ்வாதாரம் இல்லாமல் உள்ள மீனவ குடும்பங்களுக்கு 25, 000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்

மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தபோதிலும், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல எவ்வித தடையும் இல்லை. இதனால் அடுத்த 2 மாதங்களுக்கு மீன்களின் விலை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Also see... நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்  

கோவிலில் கீர்த்தனை பாடும் நாய்... வைரலாகும் வீடியோ

Also see... பாஜகவுக்கு வாக்கு சேகரித்த முதியவர் அடித்துக்கொலை! 


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading