Home /News /tamil-nadu /

செங்கல் சூளையில் சரிந்து விழுந்த செங்கற்கள்: வடமாநில பெண் தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு

செங்கல் சூளையில் சரிந்து விழுந்த செங்கற்கள்: வடமாநில பெண் தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் செங்கல் அடுக்கும்போது, ஆயிரக்கணக்கான கற்கள் சரிந்து விழுந்ததால் ஒடிசாவைச் சேர்ந்த 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வழுதிகைபேடில், சுதாகர் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. அங்கு செங்கற்களை அடுக்கும்போது, கற்கள் சரிந்ததில் ஒடிசாவைச் சேர்ந்த 18 வயது பெண் மதனா, 19 வயது பெண் பரிமளா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

    இவர்களோடு வேலை பார்த்த பலர் சொந்த மாநிலத்திற்குச் சென்றுவிட்ட நிலையில், வாங்கிய முன்பணத்தை ஈடுசெய்வதற்காக இவர்கள் சூளையில் வேலை செய்துள்ளனர். தகவல் அறிந்து சென்ற மீஞ்சூர் போலீசார், இருவர் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர் மாவட்டத்திலும் இதே போன்று நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் தொழிலகங்களில் உரிமையாளர்களின் வற்புறுத்தலின் பேரில் எவ்வித பாதுகாப்பும் இன்றி பணியாற்றி வருகின்றனர். இவர்களுள் சிலரை கொத்தடிமைகளாக நடத்தும் சூழலும் உள்ளது.

    அரசு அதிகாரிகள் செங்கல் தொழிலகங்களை ஆய்வு செய்து, இதுபோன்று பாதுகாப்பற்ற சூழலில் பணி செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாத்திட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்யாததே இதுபோன்ற விபத்துக்குக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:
    Published by:Rizwan
    First published:

    Tags: Lockdown, Thiruvallur

    அடுத்த செய்தி