ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ்நாட்டின் உரிமையை காப்பாற்ற தான் இருமொழிக் கொள்கை - அமைச்சர் பொன்முடி

தமிழ்நாட்டின் உரிமையை காப்பாற்ற தான் இருமொழிக் கொள்கை - அமைச்சர் பொன்முடி

பொன்முடி

பொன்முடி

விருப்பமுள்ளவர்கள் அவரவர்கள் விரும்பும் மொழியை கற்கலாம். மூன்றாவதாக இந்தியை படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதை மட்டுமே தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது - அமைச்சர் பொன்முடி

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தமிழ்நாட்டின் உரிமைகளை காப்பாற்றவே  தமிழ்நாடு அரசு இருமொழி கொள்கையை பின்பற்றுகிறது, யாரையும் துன்புறத்த அல்ல என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

  அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அண்ணா பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக ஒரே நேரத்தில் 6,340 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

  இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில், மொத்தம் 10,067 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அதில் 6,340 பேருக்கு நேரடியாக வழங்கப்பட்டது. அதில் அமைச்சர் பொன்முடி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். பின்னர் மாணவர்களிடையே உரையாற்றினார்.

  அதில், தமிழ்நாட்டில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய 2 மொழிகள் மட்டுமே பின்பற்றப்படும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

  இதனை தொடர்ந்து பேசிய அவர், “விருப்பமுள்ளவர்கள் அவரவர்கள் விரும்பும் மொழியை கற்கலாம். மூன்றாவதாக இந்தியை படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதை மட்டுமே தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. யாரையும் துன்புறுத்துவதற்காக இருமொழிக்கொள்கையை தமிழ்நாடு அரசு கடைபிடிக்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டவே இருமொழிக்கொள்கையினை முன்னிறுத்துகிறோம்” என தெரிவித்தார்.

  ஒருபுறம் NIA சோதனை; மறுபுறம் சென்னை போலீசார் சோதனை... பின்னணி என்ன? (news18.com)

  மும்மொழி கொள்கை மற்றும் அலுவல் மொழி தொடர்பாக சர்ச்சைகள் சமீபத்தில் அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Minister Ponmudi, Tamil language