திருச்சியில் ஒரே நாளில் 2 டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு!

கோப்புப்படம்

 • Share this:
  திருச்சியில் ஒரே நாளில் 2 டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருடப்பட்டுள்ளன.

  இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல் டாஸ்மாக் மதுபான கடைகளை ஏப்ரல் 14ஆம் தேதி வரை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

  ஒரே பொழுது போக்கான டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் மது பிரியர்கள் மதுபானங்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அவ்வப்போது பூட்டிக்கிடக்கும் கடை பக்கம் சென்று கள்ளச்சந்தையில் மது கிடைக்குமா என பார்த்துவிட்டு செல்கின்றனர்.

  இதனால் சில மாவட்டங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் பூட்டப்பட்ட கடைகளுக்குள் இருந்த சரக்குகளை அந்தந்த மாவட்ட குடோன்களுக்கு கொண்டு சென்றுவிட்டனர்.

  சில மாவட்டங்களில் கடைகளிலேயே வைத்து கடையின் மேற்பார்வையாளரும், ஊழியர்களும் திருடு போகாமல் கண்காணித்து வருகின்றனர்.

  அந்த வகையில் திருச்சி வரகனேரியை அடுத்த பிச்சை நகரில் உள்ள டாஸ்மாக் கடையை வழக்கம்போல் அதன் மேற்பார்வையாளர் செவ்வாய்க்கிழமை காலை பார்வையிடச் சென்றார் அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்தார்

  கடை வாசலில் பாதுகாப்புக்காக வைத்திருந்த கண்காணிப்பு கேமராவும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கண்காணிப்பு கேமரா உடைக்கப்படுவதற்கு முன்னர் பதிவான காட்சிகளைக் கைப்பற்றினர்

  அதில் 4 பேர் டாஸ்மாக் கடைக்குள் உள்ளே புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டில் ஈடுபட்டவர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

  டாஸ்மாக் கடையில் திருடப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. திருட்டு குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  இதே போல் திருச்சி மாவட்டம் உறையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோணக்கரை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

  திங்கட்கிழமை மாலை கடையின் பாதுகாப்புக்காக இருந்த மேற்பார்வையாளர் மாலை நான்கரை மணி அளவில் வெளியில் சென்று விட்டு திரும்பிய போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மதுபானங்கள் திருடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

  உடனடியாக உறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Also see...

   

   
  Published by:Vinothini Aandisamy
  First published: