2 கிலோ முன்னா மற்றும் ஐந்து கிலோ சோட்டு எனப்படும் சிறிய சிலிண்டர்கள் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று மாலை சென்னை தேனாம்பேட்டை காமதேனு கூட்டுறவு அங்காடியில் சிலிண்டர்களை அறிமுகப்படுத்துகிறார்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ மற்றும் 5 கிலோ இண்டேன் எரிவாயு உருளைகள் விற்பனைக்கு வருகின்றது.
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், சென்னை மாநகரில் 12 எரிவாயு கிளைகளை நடத்தி வருகின்றது. இதன் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
இச்சேவைகளை அடுத்து, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ மற்றும் 5 கிலோஇண்டேன் இலகு ரக சிலிண்டர்களை, சங்கத்தின் சுயசேவைப் பிரிவுகள் மூலம்விற்பனை செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவற்றுள் 2 கிலோ இலகு ரக சிலிண்டர் “முன்னா" என்றும், 5 கிலோ இலகுரக சிலிண்டர் “சோட்டு” என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இலகு ரக எரிவாயு உருளைகள் சமூகத்தின் அடுக்குகளின் பலதரப்பட்ட மக்களின், பிரத்யேகமான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இலகு ரக எரிவாயு உருளைகளை பெற இருப்பிடச் சான்று (Proof of address) தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இலகு ரக எரிவாயு உருளைகள் பலதரப்பட்ட மக்களும் பயனுறும் வகையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 2 கிலோ “முன்னா" ரக எரிவாயு உருளையின் விலை ரூ.961.50 புதிய இணைப்பிற்கும்,
உருளைகளில் எரிவாயு நிரப்புவதற்கு (refill) ரூ.253.50-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 5 கிலோ "சோட்டு" ரக எரிவாயு உருளையின் விலை ரூ.1528 புதிய இணைப்பிற்கும், உருளைகளில் எரிவாயு நிரப்புவதற்கு (refill) ரூ.584 என்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 5 கிலோ சோட்டு ரக எரிவாயு உருளையுடன் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள "குக்டாப்" அடுப்புகளும் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.
இந்த இலகு ரக எரிவாயு உருகைளைப் பெறுவதற்கு எவ்வித முன்பணமும் செலுத்தத் தேவையில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும். காலி இலகு ரக எரிவாயு உருளைகளை, விற்பனை முனையங்களில் ஒப்படைத்து, நிரப்பப்பட்ட எரிவாயு உருளைகளை, அதற்குரிய கட்டணத்தை மட்டும் செலுத்தி, வேறெந்த கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் பெற்றுக் கொள்ளலாம்.
இலகு ரக எரிவாயு உருளைகளைப் பெற முகவரிச்சான்று (Proof of address) சமர்ப்பிக்கத் தேவையில்லை. அடையாள அட்டை ஏதேனும் (Proof of identity) ஒன்றினை சமர்ப்பித்தால் போதுமானது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, LPG Cylinder