திருச்செங்கோடு அருகே கார்மோதி தேமுதிக பிரமுகர் உள்ளிட்ட 2 பேர் உயிரிழப்பு..

 • Share this:
  திருச்செங்கோடு அருகே புளியமரத்தில் கார்மோதி ஏற்பட்ட விபத்தில் தேமுதிக பிரமுகர் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். 3 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தோக்கவாடி அருகே கருமகவுண்டம் பாளையம் பகுதியில் நள்ளிரவு சுமார் 2 மணிக்கு கார் ஒன்று விரைந்து வந்துள்ளது. அப்போது யாரும் எதிர்பாராமல் சாலை அருகே இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் தேமுதிக பிரமுகரும்  2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் மக்கள் நலக் கூட்டணி சார்பாக திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட விஜய் கமல் அவரது மாமனார் ஈரோட்டை சேர்ந்த ரங்கனாதன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

  காரில் உடன் பயணம் செய்த விஜய் கமல் மனைவி திவ்யா, மாமியார் மாதேஸ்வரி, மனைவியின் சகோதரி அகல்யா ஆகியோர் படுகாயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரங்கநாதன்  மருத்துவ சிகிச்சைக்காக  பெங்களூர் சென்று விட்டு ஈரோடு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  மேலும் படிக்க...புதுச்சேரியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்.. அமைச்சர் நேரில் ஆய்வு..  விபத்தில் இறந்த விஜய் கமலுக்கு திவ்யா என்ற மனைவியும் சஞ்சீவ் ஹரீஸ், ஆதவ் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்.
  Published by:Vaijayanthi S
  First published: