• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இளையான்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல் - 3 பேருக்கு அரிவாள் வெட்டு

இளையான்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல் - 3 பேருக்கு அரிவாள் வெட்டு

இளையான்குடி போலீசார் இது குறித்து 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

  • Share this:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே முன்பகை காரணமாக 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள்  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இளையான்குடி அருகே உள்ள நடுவலகை கிராத்தைச் சேர்ந்த ரஞ்சித், லோகநாதன், முத்துக்குமார் மற்றும் சிலருக்கும் அருகில் உள்ள மெய்யனேந்தல் கிராத்தில் சிலருக்கும் இடையே டூவிலர் ஓட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனையால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இன்று இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் ரஞ்சித், லோகநாதன், முத்துக்குமார், ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் காயமடைந்த 3 பேரும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இளையான்குடி போலீசார் இது குறித்து 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தால் நடுவலசை,மெய்யனேந்தல் கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: