Home /News /tamil-nadu /

2 விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து மதுரை வந்த தொழிலாளர்கள்

2 விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து மதுரை வந்த தொழிலாளர்கள்

மதுரை விமான நிலையம்

மதுரை விமான நிலையம்

சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்களுடன் 2 விமானங்கள் மதுரை விமான நிலையத்திற்கு வந்தன.

    வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்டு வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சிங்கப்பூரில் இருந்து 177 பேரும், துபாயிலிருந்து 189 பேரும் இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர்.

    தொடர்ந்து விமானத்தில் வந்த அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 7 நாட்கள் சிறப்பு தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் படிக்க...

    மேலும் ஒரு துயரம்... சுஷாந்தின் மறைவால் அதிர்ச்சியில் உயிரிழந்த நெருங்கிய உறவினர்

    சீனாவின் பீஜிங் மார்க்கெட்டில் பரவும் கொரோனா - இரண்டாவது அலையா...?
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Airport, Madurai

    அடுத்த செய்தி