• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசாக கொடுத்த 2 புத்தகங்கள்..

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசாக கொடுத்த 2 புத்தகங்கள்..

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசாக கொடுத்த 2 புத்தகங்கள்..

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசாக கொடுத்த 2 புத்தகங்கள்..

தமிழ்நாட்டின் 15வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

  • Share this:
    தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில முழுநேர ஆளுநராக சமீபத்தில் மாற்றப்பட்டார். நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

    கடந்த வியாழனன்று, தமிழகம் வந்த ஆர்என் ரவிக்கு தமிழக அரசு சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், சனிக்கிழமை பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    காலை 10 மணியளவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    தொடர்ந்து, தமிழக ஆளுநராக பதவியேற்ற ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு புத்தகங்களை பரிசாக வழங்கினார். ஒன்று கீழடி தமிழர் நாகரிகம் தொடர்பானது, மற்றொன்று சென்னை வரலாறு தொடர்பானது. இந்த இரண்டு புத்தகங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களாக பார்க்கப்படுகிறது.

    Also read: ஆளுநர் நியமனத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை: திருமாவளவன்

    குறிப்பாக, முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகங்களை பரிசாக வழங்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தான் தமிழக ஆளுநராக பதவி ஏற்றுள்ள ஆர்.என்.ரவிக்கு, கீழடி என்ற புத்தகத்தையும் மெட்ராஸ் என்ற முத்தையாவால் திருத்தம் செய்யப்பட்ட புத்தகத்தையும் பரிசாக வழங்கி இருக்கிறார் முதலமைச்சர்.

    இந்த இரண்டு புத்தகங்களும் ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்களாகும். யாருக்கு புத்தகங்கள் அளித்தாலும், அதில் தமிழ் கலாச்சாரம் முன்னே வந்து நிற்குமாறு உள்ள புத்தகங்களை தேர்ந்தெடுத்து முதலமைச்சர் பரிசளித்து வருவது கவனிக்கத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: