Breaking | நாகையில் கோயிலுக்குள் பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது.. (வீடியோ)
Breaking | நாகையில் கோயிலுக்குள் பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது.. (வீடியோ)
நாகையில் கோயிலுக்குள் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. கணவரை இழந்த பெண்ணை கோயிலுக்குள் இழுத்துச்சென்று பாலியல் வல்லுறவு செய்த 2 பேரை வெளிப்பாளையம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகையில் கோயிலுக்குள் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. கணவரை இழந்த பெண்ணை கோயிலுக்குள் இழுத்துச்சென்று பாலியல் வல்லுறவு செய்த 2 பேரை வெளிப்பாளையம் போலீசார்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் நாக பகுதியை சேர்ந்தவர் சந்திரா. கணவர் இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தார். இவர் கட்டிட கூலி வேலை செய்யும் சித்தாள் வேலைக்கு சென்று வந்துள்ளார். தனியாக வசித்து வந்த இவர் இரவு நேரத்தில் அவரது சகோதரி வீட்டிற்கு சென்று தங்குவது வழக்கம். அதுபோல் நேற்று இரவு சகோதரி வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு சில இளைஞர்கள் சந்திராவை வாயை பொத்தி அருகே இருந்த கோவிலுக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட அவர் உடல் நலம் பாதித்து நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காமராஜ் நகரில் உள்ள சந்திராவின் சகோதரி வீட்டிற்கு சென்ற நபர்கள் இதுபற்றி புகார் கூறக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து வெளிப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.