• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஒசூர் அருகே கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இருவர் கைது: 2 லட்சம் மதிப்பிலான கஞ்சா செடிகளை தீயிட்டு எரித்த போலீசார்

ஒசூர் அருகே கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இருவர் கைது: 2 லட்சம் மதிப்பிலான கஞ்சா செடிகளை தீயிட்டு எரித்த போலீசார்

ஒசூர் அருகே கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இருவர் கைது; 2 லட்சம் மதிப்பிலான கஞ்சா செடிகளை தீயிட்டு எரித்த போலீசார்

ஒசூர் அருகே கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இருவர் கைது; 2 லட்சம் மதிப்பிலான கஞ்சா செடிகளை தீயிட்டு எரித்த போலீசார்

ஒசூர் அருகே மிளகாய் மற்றும் கனகாம்பரம் பூ தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். 2 லட்சம் மதிப்பிலான கஞ்சா செடிகளை அவர்களிடமிருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்தது.

  • Share this:
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே அட்டப்பள்ளம் என்னும் கிராமத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி பண்டிகங்காதருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, அவரின் அறிவுறுத்தலின்படி தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா தலைமையிலான அஞ்செட்டி போலீசார், அட்டப்பள்ளம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    Also read: நீட் தேர்வில் வெற்றிபெற்றும் மருத்துவக் கல்வியில் சேர முடியாமல் தவிக்கும் பட்டியலின மாணவி - முதல்வருக்கு கல்வியாளர்கள் கோரிக்கை

    ஒசூர் அருகே கஞ்சா செடிகள் வளர்ப்பு




    அங்கு மிளகாய் தோட்டம் கனகாம்பரம் பூ தோட்டத்தில் ஆங்காங்கே சந்தேகிக்காத வகையில் கஞ்சா செடிகளைப் பயிரிட்டிருந்த அங்கமுத்து, கோவிந்தன் ஆகிய இரண்டு விவசாயிகளைக் கைது செய்த போலிசார், மிளகாய் தோட்டம் மற்றும் கனகாம்பரம் பூ தோட்டத்தில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா செடிகளை பறிமுதல் செய்ததுடன் போலீசார் அவற்றைத் தீயிட்டு அழித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: