கொரோனாவால் பெற்றோரை இழந்த 197 குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட நிதியுதவி- மீதி பேருக்கு எப்போது?

மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 197 குழந்தைகளுக்கு மட்டுமே இதுவரை நிதி வழங்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை வழங்கிட ஏதுவாக, மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறப்புப் பணிப் பிரிவு, அரசால் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன.

  கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கிடவும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.

  இக்குழந்தைகளுக்கு பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றிடவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

  தமிழகத்தில் கொரோனாவால் தந்தை, தாய் என பெற்றோர் இருவரையும் இழந்த 92 குழந்தைகள் மற்றும் தந்தை அல்லது தாய் என பெற்றோரில் யாரேனும் ஒருவரை இழந்த 3,409 குழந்தைகள் என 3,501 குழந்தைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று கட்டங்களாக தற்போது வரை 197 குழந்தைகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

  கொரோனாவில் இரண்டு பெற்றோர்களை இழந்த 14 குழந்தைகள், ஏற்கனவே பெற்றோரில் ஒருவரை இழந்து தற்போது கொரோனாவால் மற்றொரு பெற்றோரை இழந்து இருக்கும் 44 குழந்தைகள் என 58 குழந்தைகளுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிதி வழங்க அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொரோனாவால் பெற்றோரில் ஒருவரை இழந்திருக்கும் 139 குழந்தைகளின் காப்பாளர்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 197 குழந்தைகளுக்கு
  மொத்தம் 7.07 கோடி ரூபாய் நிதி இத்திட்டத்தின் கீழ் நிதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: