Home /News /tamil-nadu /

சினிமா பாணியில் வழிப்பறி கொள்ளையனை இருசக்கர வாகனத்தில் துரத்திப் பிடித்த 19 வயது இளைஞர்..

சினிமா பாணியில் வழிப்பறி கொள்ளையனை இருசக்கர வாகனத்தில் துரத்திப் பிடித்த 19 வயது இளைஞர்..

கார்த்திக், கார்த்திக்கின் அம்மா

கார்த்திக், கார்த்திக்கின் அம்மா

சினிமா பாணியில் கொள்ளையர்களை விரட்டிச் சென்று தனது இரு சக்கர வாகனத்தின் மூலம் அவர்களை இடித்து கீழே விழவைத்து பணத்தை பத்திரமாக மீட்டு கொடுத்த கார்த்தி என்ற இளைஞரை காவல்துறையினரும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் நேற்றிரவு 7 மணியளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் தனது கைக்குழந்தையுடன் நடந்து வந்துள்ளார்.
இவரை நோட்டமிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பணம் வைத்திருந்த இவரது கைப்பையை பிடுங்கி சென்றுள்ளனர். 

இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் சத்தம் போட்டு அழுதுள்ளார். அங்கு டீக்கடையில் நின்று டீ குடித்துக்கொண்டிருந்த 19 வயது இளைஞரான கார்த்திக் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு இரண்டு வழிப்பறிக்கொள்ளையர்களையும் துரத்தியுள்ளார். மேலும் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்ததால் வண்டியை பாதியில் நிறுத்திவிட்டு கொள்ளையர்களை துரத்தியுள்ளார்.

சரியாக நூறு மீட்டர் தொலைவில் அந்த இரண்டு கொள்ளையர்களையும் துரத்திச் சென்று அவர்களின் சட்டையை பிடித்து கீழே தள்ளி அவர்கள் மீது அடிப்பதற்காக பாய்ந்துள்ளார்.
அதில் ஒரு இளைஞர் தப்பித்து ஓடிவிட பணப்பையை வைத்திருந்த இளைஞரை கார்த்திக் இறுக்கமாக பிடித்துக்கொண்டு சத்தமிட்டுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் கூடி வழிப்பறி கொள்ளையனை பிடித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் பணப்பையை கொள்ளையரிடம் இருந்து பிடுங்கிய கார்த்தி அதனை அந்த பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிடிபட்டு கொண்ட வழிப்பறி கொள்ளையனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது சைதாப்பேட்டையைச் சேர்ந்த முக்தார் உசேன்(21) என்பது தெரியவந்தது. மேலும் அவருடன் வந்த மற்றொரு வழிப்பறி கொள்ளையன் பெரம்பரை சேர்ந்த ஹாலித் என்பதும் தெரியவந்தது. அவர்கள் கொண்டு வந்திருந்த இரு சக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர்கள் மீது வேளச்சேரியில் வழக்கு பதிவு இருப்பதும் தெரியவந்தது.
இதனால் வேளச்சேரி காவல்துறையினர் பிடிபட்ட முக்தார் உசேனை வேளச்சேரி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பணப்பையை பறிகொடுத்த அந்தப் பெண் காவல் துறையினர் வருவதற்குள் சென்று விட்டதால் அவர் யார் என்ற விவரம் தற்போது வரை கிடைக்கவில்லை.
கார்த்திக் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக இவர் பாக்ஸிங் கற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா பாணியில் கொள்ளையர்களை விரட்டிச்சென்று தனது இரு சக்கர வாகனத்தின் மூலம் அவர்களை இடித்து கீழே விழவைத்து பணத்தை பத்திரமாக மீட்டு கொடுத்த கார்த்தி என்ற இளைஞரை காவல்துறையினரும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Published by:Gunavathy
First published:

Tags: Karthik, Nungambakkam, One lakh, Snatching, Theif, Theives

அடுத்த செய்தி