ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 19 நாட்களாக நடைபெற்ற நகை சரிபார்ப்பு நிறைவு… ஆய்வறிக்கை வெளியீடு குறித்து அதிகாரிகள் தகவல்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 19 நாட்களாக நடைபெற்ற நகை சரிபார்ப்பு நிறைவு… ஆய்வறிக்கை வெளியீடு குறித்து அதிகாரிகள் தகவல்

சிதம்பரம் நடராஜர் கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயில்

ஏப்ரல் 2005 முதல் 28. 9. 2022 இன்று வரை உள்ள காணிக்கையாக வரப்பெற்ற நகைகளை நான்கு கட்டங்களாக 19 நாட்களாக ஆய்வு செய்து இன்றுடன் முடித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chidambaram, India

  சிதம்பரம் நடராஜர் கோவில் நகை சரிபார்ப்பு ஆய்வு  நிறைவு பெற்றுள்ளது. ஆய்வறிக்கை எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

  இந்து சமய அறநிலை ஆட்சித்துறையை சேர்ந்த  6 பேர் கொண்ட குழுவினர் 19 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். 1955ம் ஆண்டிலிருந்து,மார்ச் 2005ஆம் ஆண்டு வரை மதிப்பீடு செய்யப்பட்ட நகைகளை மீண்டும் மறுமதிப்பீடு செய்ய தீட்சிதர்களிடம் கேட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து சென்றுள்ளனர்.

  பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் குறித்து அறநிலைய ஆட்சித் துறைக்கு வரப்பெற்ற புகார்களை அடுத்து அதிகாரிகளும் கோவில் தீட்சிதர்களும் கடந்த 5 மாதங்களாக மாறி மாறி கோவில் நிர்வாகம் தொடர்பாக பதில் விளக்க கடிதங்களை எழுதி வந்தனர். இந்நிலையில் இந்து சமய அறநிலை ஆட்சித் துறை அதிகாரிகள் கடந்த ஜுன் மாதம் கோவில் கணக்கு வழக்குகளை சரி பார்ப்பதற்காக சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை புரிந்தனர்.

  இதற்கு தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வகித்து வருவதாகும்.  எனவே கணக்கு வழக்குகளை காண்பிக்க மறுத்து ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்தனர்.

  சிதரம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள்

  அதனை தொடர்ந்து அதிகாரிகள் கோயில் உள்ளே அமர்ந்து திரும்பச் சென்றனர். இதன்பின்னர் பொதுமக்கள் கோவில் நிர்வாகம் தொடர்பான புகார்களை மாவட்ட இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம் என பத்திரிகைகளில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விளம்பரம் செய்திருந்தனர்.

  என் பவர் தெரியாம விளையாடுறீங்க... யாரை பார்த்தும் பயமில்லை... TTF வாசன் வீடியோ மூலம் எச்சரிக்கை

  தொடர்ந்து மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்திற்கு  பல்வேறு புகார்கள் வந்து இருந்த சூழ்நிலையில் அந்தப் புகார்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் தீட்சிதர்களிடம் விளக்கம் கேட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் நகை சரிபார்ப்பு ஆய்விற்காக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வருகை புரிந்தனர்.

  அவர்களை தீட்சிதர்கள் உள்ளே அழைத்துச் சென்று நகை சரிபார்ப்பாய்விற்கு ஒத்துழைப்பு நல்கி,  நகை தொடர்பாக பராமரித்து வைத்திருந்த ஆவணங்களை அவர்களிடம் காண்பித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் நகை சரிபார்ப்பு ஆய்வை மேற்கொண்டு வந்தனர். கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில், திருவண்ணாமலை மாவட்ட துணை ஆணையர் குமரேசன், விழுப்புரம் மாவட்ட துணை ஆணையர் சிவலிங்கம் மூன்று நகை மதிப்பீட்டாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினரும், தீட்சிதர்கள் சார்பில் நகை மதிப்பீட்டாளர் ஒருவரும் காணொளி பதிவு செய்பவரும் வருகை புரிந்து கடந்த 19 தினங்களாக மூன்று கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

  தொடர்ந்து ஆவணங்களைப் பெற்ற அதிகாரிகள் அதில் உள்ளவாறு நகைகள் உள்ளனவா என்பது குறித்து சரி பார்த்தனர். கடந்த 2005ஆம் ஆண்டு நகை சரிபார்ப்பாய்வு நடைபெற்றது அதனை தொடர்ந்து தற்பொழுது 17 ஆண்டுகளுக்குப் பிறகு நகை சரிபார்ப்பாய்வு நடைபெற்று முடிவடைந்துள்ளது .

  19 தினங்களாக நடைபெற்ற ஆய்வில் கடந்த 2005 ஆம் ஆண்டு மார்ச்லிருந்து இன்றைய தேதி வரையில் வாங்கப்பட்ட காணிக்கை நகைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்ட நன்கொடை ரசிதுகள் மூலமும் சரி பார்த்தனர்.

  ஏப்ரல் 2005 முதல் 28. 9. 2022 இன்று  வரை உள்ள காணிக்கையாக வரப்பெற்ற  நகைகளை நான்கு கட்டங்களாக 19 நாட்களாக ஆய்வு செய்து இன்றுடன் முடித்துள்ளனர். மேலும் 1955 முதல் மார்ச் 2005ம் ஆண்டு வரை மதிப்பீடு செய்யப்பட்ட இனங்களை மறு மதிப்பீடு செய்யும் பொருட்டு காண்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது நடந்த ஆய்வு குறித்து முழு அறிக்கை ஒரு மாத காலங்களுக்குப் பிறகு வெளியிடப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்து சென்றுள்ளனர் .

  செய்தியாளர் - பிரசன்னா வெங்கடேசன்

  Published by:Musthak
  First published:

  Tags: Chidambaram