தஞ்சையில் ஹைடெக்காக பாலியல் தொழில் நடைபெறுவது தற்போது தெரியவந்துள்ளது. போலி மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடத்திவந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 9 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து கைது செய்யுமாறு திருச்சி மத்திய மண்டல காவல்துறை உயரதிகாரிகளின் உத்தரவின்படி வல்லம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன், பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் பா.தென்னரசு ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு பாலியல் தொழில் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டன.
Also read: ’வெற்றி பெற்று இங்கே வருவார்...’ மன்னார்குடி அருகே கமலா ஹாரிஸ்க்கு பேனர் அடித்து வாழ்த்து
தஞ்சை நகரப் பகுதியில் உள்ள வீடு மற்றும் மசாஜ் சென்டர்களில் தீவிர சோதனை செய்ததில், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தரகர்கள் மூலமாக இளம் பெண்களைக் கொண்டு வந்து பாலியல் தொழில் நடத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 9 பெண்களும் மீட்கப்பட்டனர்.
சிக்கியவர்களிடமிருந்து ரூ.39,080 பணம், 31 செல்போன்கள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.