Home /News /tamil-nadu /

தமிழகத்தில் புதிததாக 1803 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் புதிததாக 1803 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Corona Update : தமிழகத்தில் புதிததாக 1803 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு கொரேனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2000 ஐ கடந்து வந்தது. . இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. தற்போது அதன் தாக்கம் கணிசமாக குறைந்து வருகிறது.

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,117 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1803 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 35,37,895ஆக அதிகரித்துள்ளது.

    Also Read : செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் ஒட்டப்பட்ட மோடி படத்தில் கருப்பு மை பூசிய மூவர் கைது!

    இன்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 2, 233 பேர் குணமடைந்த வீடு திரும்பிய நிலையில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 34,85,579 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,032 ஆக உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 396 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Corona, CoronaVirus

    அடுத்த செய்தி