தொடரும் பிகில் சோகம்... சிறப்புக் காட்சி விவகாரம்.... கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் மேலும் 18 பேர் கைது

தொடரும் பிகில் சோகம்... சிறப்புக் காட்சி விவகாரம்.... கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் மேலும் 18 பேர் கைது
  • News18
  • Last Updated: November 2, 2019, 9:06 AM IST
  • Share this:
கிருஷ்ணகிரியில் கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் மேலும் 18 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சி 24-ம் தேதி நள்ளிரவு திரையிட தாமதமானதால் விஜய் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி ரவுண்டான பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள், சிக்னல் பல்புகள், தடுப்பு வேலிகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர்.

இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்ட 32 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.


இந்நிலையில் சிசிடிவி காட்களின் அடிப்படையில் மேலும், 7 சிறுவர்கள் உள்பட 18 பேரை கைது செய்த போலீசார் அவர்களையும் சிறையில் அடைத்தனர்.

இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள மேலும் பலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Also watch
First published: November 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்