கிண்டியில் மத்திய அரசு நிறுவனத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று

கோப்பு படம்

கிண்டியில் உள்ள மத்திய பயிற்சி நிலையத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. இந்த நிலையில், கிண்டியில் உள்ள மத்திய பயிற்சி நிலையத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிண்டியில் உள்ள மத்திய பயிற்சி மையத்தில் 150 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 300 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆவடியிலிருந்து வரும் நபர் ஒருவர் மூலமாக இங்கு தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. தொற்று வந்ததால் அந்த நிறுவனத்தை உடனே மூட முடியாது எனவும் அனைவருக்கும் பரிசோதனை செய்து தொற்று நெகடிவ் என வந்தால் மட்டுமே ஊருக்கு அனுப்ப முடியும் எனவும் பாசிடிவ் என வந்தால் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை செயலர்  ராதாகிருஷ்ணன் , சென்னை மாநகராட்சி சுகாதார இணை ஆணையர் ஆல்பி ஜான், மாநகர சுகாதார அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் இதனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Published by:Ram Sankar
First published: