• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 3 மணி நேரத்தில் 18 செல்போன்களை வழிப்பறி செய்த திருடர்கள்! ஒருவர் கைது

3 மணி நேரத்தில் 18 செல்போன்களை வழிப்பறி செய்த திருடர்கள்! ஒருவர் கைது

திருட்டு

திருட்டு

  • Share this:
சென்னை மணலி பகுதியிலிருந்து தேனாம்பேட்டை வரை ஒரே இரவில் 18 செல்போன்களைப் பறித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பார்க் ஹோட்டலில் இருந்து இருவர் இருசக்கர வாகனத்தில் வெளியே வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் செல்போனை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.
பின்னர் தப்பி சென்ற இருவரையும் இவர்களது இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றனர்.

அப்போது செல்போன் பறித்து தப்பி சென்ற வாகனத்தின் மீது இவர்களது இருசக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்துள்ளனர். பின்னர் செல்போனை பறித்து சென்ற ஒருவரை இவர்கள் பிடித்துள்ளனர். ஆனால் ஒருவர் பைக்கை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் பிடித்த நபரை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி(22) என்பதும், இவர்கள் மணலி பகுதியிலிருந்து ஒரே இரவில் 18 பேரிடம் தொடர்ச்சியாக செல்போன் பறித்து வந்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் தப்பிச் சென்ற இவரது கூட்டாளியான கார்த்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவரிடம் இருந்து 18 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் இவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: