நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம்- டிடிவி தினகரன்

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம்- டிடிவி தினகரன்
சென்னை உயர்நீதிமன்றம்.
  • News18
  • Last Updated: July 23, 2018, 3:35 PM IST
  • Share this:
தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணை தொடங்கியது.  அதில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் என தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 பேரை தகுதிநீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார்.

இதை எதிர்த்து 18 பேரும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று இந்திரா பானர்ஜி-யும், உத்தரவு செல்லாது என்று சுந்தரும் தீர்ப்பளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்கும் 3வது  நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.


இந்த மனுவை கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு எடுத்த நீதிபதி சத்தியநாராயணன், இன்று முதல் விசாரணை தொடங்கும் என்று தெரிவித்தார். இதன்படி, இன்று காலை 10-30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனை வரும் 27-ம் தேதிவரை தினமும் விசாரிக்க உள்ளதாக நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்துள்ளார்.

அதன்படி முதல் நாளான இன்று, எம்.எல்.ஏக்கள் 18 பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார். அதில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் என தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் எம்.எல்.ஏ.வும் பதவியை தியாகம் செய்ய விரும்ப மாட்டார்கள் என்றும் , முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளிக்கும் போது அதிமுக கட்சியே கிடையாது என்றும் தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சபாநாயகர், முதலமைச்சர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் தரப்பு வழக்கறிஞர்கள் அடுத்தடுத்த தினங்களில் வாதிட உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 23, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading