• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கும்பகோணம் பள்ளி தீவிபத்து : 17-ம் ஆண்டு நினைவுநாள்

கும்பகோணம் பள்ளி தீவிபத்து : 17-ம் ஆண்டு நினைவுநாள்

குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் சம்பவம் நடந்த பள்ளி முன்பு தங்களது குழந்தைகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். 

  • Share this:
கும்பகோணம் பள்ளி தீ விபத்தின்  17 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று, பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கும்பகோணத்தில் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா உதொடக்கப் பள்ளியில் கடந்த 15 ஆண்டுக்கு முன்பு தீ விபத்து நிகழ்ந்தது  .இதில் 94 குழந்தைகள் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது . உலகையே உலுக்கிய இச் சம்பவத்தின் 17ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் சம்பவம் நடந்த பள்ளி முன்பு தங்களது குழந்தைகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். 17 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது குழந்தைகள் என்னென்ன உணவுப் பண்டங்களை விரும்பி உண்டார்களோ அந்த உணவுப் பொருட்களை அவர்களது உருவ படத்திற்கு முன்பு வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Also Read : நீட் தேர்வு நடத்துவது குறித்து மறு பரிசீலனை செய்யுங்கள் - பிரதமரிடம் மு.க. ஸ்டாலின் கோரிக்கை

இறந்த குழந்தைகளின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். அரசு தலைமை கொறடா ஊர்வலமாக வந்து நினைவு பூங்காவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், நகர செயலாளர் தமிழழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: