தமிழகத்தில் புதிய உச்சமாக 17,897 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனா தடுப்புப் பணி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. யாரும் எதிர்பாராதவகையில் இரண்டாவது அலை சுனாமி போன்ற தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

  எனினும், கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவது பெரும் சவாலாக உள்ளது. தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நேற்று 16,000ஐ கடந்தது. இந்தநிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,48,064 ஆக உயர்ந்துள்ளது.

  தொடர்ந்து, கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 15,542 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 10,21,575 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 107 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 13,933 ஆக அதிகரித்துள்ளது.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: