முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் 1,748 பெண்கள் விடுதிகள்- ஆர்.டி.ஐயில் கிடைத்த தகவல்

தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் 1,748 பெண்கள் விடுதிகள்- ஆர்.டி.ஐயில் கிடைத்த தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான மகளிர் விடுதிகள் உரிய அனுமதியின்றி செயல்படுவது ஆர்.டி.ஐ தகவலில் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு விடுதிகள் மற்றும் வீடுகள் சட்டம் 2014-ன் படி அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகளும் மாவட்ட ஆட்சியரிடம் உரிமம் பெற வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில், ‘தமிழ்நாட்டில் உள்ள 1,748 பெண்கள் தங்கும் விடுதிகளில் 1,155 விடுதிகள் அனுமதியின்றி செயல்படுவது தெரியவந்துள்ளது.

சென்னையில் உள்ள 714 பெண்கள் தங்கும் விடுதிகளில், 31 விடுதிகள் மட்டுமே அனுமதி பெற்றுள்ளதாகவும், சென்னையில் மட்டும் 683 பெண்கள் தங்கும் விடுதிகள் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க ஒற்றைச் சாரள முறை அனுமதியை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என விடுதி அமைப்பாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிகார்- தமிழ்நாடு இடையே நல்லுறவை கெடுக்க முயற்சி - சிராக் பாஸ்வான் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னைக்கு அடுத்தபடியாக திருப்பூரில் 113 விடுதிகள் அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 873 பெண்கள் தங்கும் விடுதிகளுக்கு சமூக நலத்துறை இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் 379 பெண்கள் தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக ஆர்டிஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

First published:

Tags: Women hostel