கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்

கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்

வாக்காளர்கள்

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 134 கட்டுப்பாடு யூனிட்கள், 559 விவிபேட் இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

 • Share this:

  தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகின்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடித்த வாக்களித்து வருகின்றனர்.

  முதல் முறை வாக்காளர்கள், 103 முதியவர், பெண்கள் என பலதரப்பட்ட மக்கள் உற்சாகமாக வாகக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என முக்கிய விஐபிகள் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

  சத்ய பிரதா சாகு

  இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவ்வப்போது வாக்குப்பதிவு தடை பட்டது.

  Must Read : தனக்கு பதிலாக ஓட்டு போட்டது யார்? கொந்தளித்த வாக்காளர் : புதுச்சேரியில் ஒரு 49P சம்பவம்

  அதன்படி, தமிழகம் முழுவதும் 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 134 கட்டுப்பாடு யூனிட்கள், 559 விவிபேட் இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
  Published by:Suresh V
  First published: