• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காதலுக்கு தந்தை எதிர்ப்பு.. திருப்பூரில் 17 வயது சிறுமி தற்கொலை

காதலுக்கு தந்தை எதிர்ப்பு.. திருப்பூரில் 17 வயது சிறுமி தற்கொலை

கோப்புப்படம்.

கோப்புப்படம்.

திருப்பூர் அருகே காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் 17 வயது சிறுமி வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

  • Share this:
    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நாரயணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். கூலித் தொழிலாளியான இவருக்கு சுதா என்ற மனைவியும், 17 வயதில் மைதிலி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். நடராஜ் அருகில் சொந்த வீடு ஒன்றை கட்டி வருகிறார்.

    இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் மைதிலி பழகி வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் நடரஜுக்கு தெரிந்து மைதிலியை கண்டித்துள்ளார். இதனால் மைதிலி மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

    புதன்கிழமை காலை வீடு கட்டும் பணிக்காக லாரி மூலம் செங்கல் வந்துள்ளது. அதை இறக்கி வைக்க நடராஜ், மனைவியுடன் கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளார்.

    திரும்பி வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீட்டுக்குள் மைதிலி தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார். பதறிய பெற்றோர் உடலை இறக்கி பார்த்தபோது, ஏற்கெனவே உயிர் பிரிந்திருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்துக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் படிக்க...உலக புகைப்பட தினம்: மனதைக் கொள்ளையடிக்கும் இந்திய ஊர்களின் படங்கள்

    சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் காதலை கண்டித்து தந்தை திட்டியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

    மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: