ஒரே மளிகைக்கடையில் பணியாற்றிய 17 பேருக்கு கொரோனா - ஆரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், ஒரே மளிகைக் கடையில் பணிபுரிந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இன்று அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

ஒரே மளிகைக்கடையில் பணியாற்றிய 17 பேருக்கு கொரோனா - ஆரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடல்
(மாதிரிப்படம்)
  • Share this:
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரத்து 762 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. குறிப்பாக ஆரணியில் மட்டும் 200க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், ஆரணி லிங்கப்பன் தெருவிலுள்ள மளிகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



Also read... கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீசியன்களுக்கு தகுதி உள்ளது - நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

இதனால் ஆரணியில் உள்ள வியாபாரிகள் அனைவரும் பீதி அடைந்துள்ளதால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு முழு கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆரணியில் மருந்துக் கடை, பால் கடை தவிர ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading