தொடங்கியது தென்மேற்கு பருவமழை - தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
Weather Update | சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட 17 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

கோப்பு படம்
- News18 Tamil
- Last Updated: June 1, 2020, 8:42 PM IST
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கும். அதன்படி, இந்த ஆண்டு ஒன்றாம் தேதியான இன்றே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதையொட்டி, கேரள தலைநகரம் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதலே மழை நீடித்தது.
தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கன்னூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை, அடுத்தடுத்த நாட்களில் கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் தீவிரமடையும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை நாட்டின் மொத்த மழைப்பொழிவில் 75 சதவிகிதமாக இருந்து வருகிறது. இதனிடையே, தென்கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. கோவாவிற்கு தென்மேற்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், குஜராத் மாநிலம் சூரத்துக்கு தென்மேற்கு 920 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது
இது செவ்வாய்கிழமை புயலாக வலுப்பெற்று மேற்கு கடற்கரையை ஒட்டியுள்ள வடக்கு திசையை நோக்கி நகரக்கூடும் என்றும் இதன் காரணமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு, கேரள கடற்கரை பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளுக்கு வரும் 4ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாமென சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதேசமயம், வெப்பச்சலனம் காரணமாக, சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட 17 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 7 செ.மீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கும். அதன்படி, இந்த ஆண்டு ஒன்றாம் தேதியான இன்றே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதையொட்டி, கேரள தலைநகரம் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதலே மழை நீடித்தது.
தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கன்னூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை, அடுத்தடுத்த நாட்களில் கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் தீவிரமடையும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை நாட்டின் மொத்த மழைப்பொழிவில் 75 சதவிகிதமாக இருந்து வருகிறது.