ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்..

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்..

தடுப்பூசி முகாம்

தடுப்பூசி முகாம்

கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு பிறப்பையொட்டி ஞாயிறன்று தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழகம் முழுவதும் இன்று 50,000 இடங்களில் 16வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

ஓமைக்கரான் கொரோனா தொற்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துதலை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழகம் முழுதும் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 15 கட்டமாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், 16வது கட்ட முகாம் இன்று நடைபெறுகிறது. இதில் சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்..

இரண்டாவது தவணை செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சனிக்கிழமையன்று நடத்தப்பட்டு வந்த தடுப்பூசி முகாம் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு பிறப்பையொட்டி இரு வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Corona, Covid-19, COVID-19 Test, Covid-19 vaccine, Omicron, Tamil News, Tamilnadu