சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த விழுப்புரத்தை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பானிபூரி வியாபாரியை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாயார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதனைக்கேட்டு அந்தப்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து செஞ்சி மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார்.
இதனையடுத்து சிறுமியிடம் காவலர்கள் விசாரணையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வீட்டில் உள்ளவர்களிடம் கோபித்துக்கொண்டு சிறுமி சென்னைக்கு சென்றுள்ளார். அவருக்கு சென்னையில் யாரையும் தெரியாதது என்பதால் சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த பானிபூரி வியாபாரி ஒருவருடன் பேசியுள்ளார். சிறுமி வீட்டை விட்டு தனியாக வந்திருந்தப்பதை அறிந்த அந்த நபர் சிறுமிக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவரிடம் ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார். பயத்தின் காரணமாக சிறுமி தனக்கு நடந்த கொடுமையை வெளியில் கூறாமல் இருந்துள்ளார்.
சம்பவம் நடந்த இடம் சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சிறுமியிடம் திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் கூறிய அடையாளங்களை கொண்டு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் பானிபூரி விற்கும் திருசூலம் பகுதியை சேர்ந்த ஆறுமுகத்தை (வயது 22) போலீஸார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.