சென்னையில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட 16 வயது சிறுவன் மீட்பு

சென்னையில் பட்டப்பகலில் தாம்பரம் அருகே முடிச்சூரில் கடத்தப்பட்ட 16 வயது சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.

  • Share this:
சென்னையில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் தொழில் அதிபரின் 16 வயது மகனை மீட்டு, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம் அடுத்த முடிச்சூர் மதனபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது ஒரே மகனான 16 வயது நவஜீவனை இன்று காலை மர்ம நபர்கள் கடத்தி சென்று ஐந்து லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.இது குறித்து, தங்கராஜ் பீர்க்கன்காரனை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்கரனை போலீசார் சிசிடிவி கேமரா காட்சி அடிப்படையில் தீவிரமாக விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சிறுவனை காரில் கடத்தியதாக சரத்குமார், ஹரிஹரன், விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading