10% இடஒதுக்கீடு: 5 கட்சிகள் ஆதரவு; 16 கட்சிகள் கடும் எதிர்ப்பு

மத்திய அரசின், இந்த முடிவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழக அரசு அழைப்புவிடுத்து.

10% இடஒதுக்கீடு: 5 கட்சிகள் ஆதரவு; 16 கட்சிகள் கடும் எதிர்ப்பு
அனைத்து கட்சி கூட்டம்
  • News18
  • Last Updated: July 8, 2019, 9:42 PM IST
  • Share this:
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீட்டுக்கு 16 கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 5 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பொருளாதார நிலையில் பின்னடைந்த நிலையில் உள்ள உயர் சாதிப் பிரிவினருக்கு அரசுக் கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்பிலும் 10% சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் இயற்றியது.

மத்திய அரசின், இந்த முடிவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழக அரசு அழைப்புவிடுத்து. இன்று, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.


அந்தக் கூட்டத்தில் 21 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டன. அதில், பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடுக்கு 16 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. புதிய தமிழகம், பா.ஜ.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீடு பாதகம் இல்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினர்.

Also see:

First published: July 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading