• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கைதான சுகேஷ் சந்திரசேகர் பங்களாவில் 16 கார்கள், பணம், தங்கம் பறிமுதல்

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கைதான சுகேஷ் சந்திரசேகர் பங்களாவில் 16 கார்கள், பணம், தங்கம் பறிமுதல்

சுகேஷ் சந்திரசேகர்

சுகேஷ் சந்திரசேகர்

விடிய விடிய நடைபெற்ற சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் பறிமுதல்

  • Share this:
    இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் கைதான சுகேஷ் சந்திரசேகரின் பங்களாவில் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் விடிய விடிய நடத்திய சோதனையில், அங்கிருந்த 16 சொகுசு கார்கள், 2 கிலோ தங்கம், 82½ லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து அந்த பங்களாவுக்கும் சீல் வைத்தனர்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர், அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்புன் இருப்பதாக கூறி தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன.

    கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக பிளவுப்பட்டிருந்தபோது, இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி. தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி டெல்லி குற்றவியல் போலீசார் டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன், தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட பலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் சுகேஷ் சந்திரசேகர் மட்டும் சிறையிலேயே உள்ளார்.

    இந்நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும், சுகேஷ் சந்திரசேகருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர் ஒரு மோசடி பேர்வழி என்றும் கூறப்பட்டது.

    இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், இதுபோன்ற பல மோசடி நிகழ்வுகளில் ஈடுபட்டு சுகேஷ் சந்திரசேகர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனால், டெல்லி அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரித்து பெங்களூருவில் உள்ள சுகேஷ் சந்திரசேகரின் வீடு, சென்னையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனை நேற்று முடிவுக்கு வந்தது.

    Must Read : கோயில் நிலங்கள் : சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

    இந்நிலையில், சென்னையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரின் பங்களாவில் 16 சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நடிகர்கள் பயன்படுத்தும் சொகுசு கேரவானும் அங்கே இருந்தது. இத்தனை கார்களை ஒரே இடத்தில் இருப்பதைக் கண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், அந்த பங்களாவில் விடிய விடிய சோதனை செய்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதில், கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் அந்த பங்களாவுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: