வந்தவாசி அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

கோப்புப் படம்

திருவண்ணாமலையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று பேர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  வந்தவாசி இந்திரா நகரைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம், கீழ்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த இலியாஸ் முகநூலில் நண்பராக இருந்துள்ளார். இருவரும் பல நாட்களாக முகநூல் மூலம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி சிறுமியை வந்தவாசி புறவழிச்சாலைக்கு அழைத்து சென்ற இலியாஸ், அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

  மேலும் தனது நண்பர்களான சூர்யா, பர்கத் ஆகியோருக்கும் இளைஞர் இலியாஸ் தகவல் தெரிவித்துள்ளார். மூன்று பேரும் சிறுமிக்கு மதுபானத்தை கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

  மேலும் படிக்க... கைலாசாவிற்கு செல்ல ஆசையாக உள்ளது.. விபரீத ஆசையை வெளிபடுத்திய நடிகை.

  இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், இலியாஸ், சூர்யா, பர்கத் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.  இந்த நிலையில், சிறுமிக்கு மதுபானத்தை ஊற்றி வன்கொடுமை செய்ததால், ஆட்சியர் உத்தரவின்பேரில் மூன்று பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்த காவல்துறையினர், வேலூர் சிறையில் அடைத்தனர்.
  Published by:Vaijayanthi S
  First published: