பிரபல பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லை - பாதிரியார் உள்ளிட்ட நால்வர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு

கோப்புப்படம்

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நால்வர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  சென்னையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பாதிரியார் உள்ளிட்ட நால்வர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  ஹைதரபாத்தை சேர்ந்த பிரபல பாடகி அவரது 15 வயது மகளை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது தங்கையின் வீட்டில் விடுமுறைக்காக கொண்டு வந்துவிட்டுள்ளார். இந்த நிலையில் சிறுமியின் சித்தி கணவரான ஜான் ஜெஷில், சிறுமியின் சித்தி ஷகீனா ஷான், உறவினரின் மகன் கிளாரோ ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

  சிறுமியை கீழ்பாக்கம் அலைவ் சர்ச்க்கு அழைத்து செல்லும்போது சர்ச் பாதிரியாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்ச் பாதிரியார் ஹென்றி சிறுமிக்கு பல முறைமுறை பாலியல் தொல்லை தந்துள்ளார். தனக்கு நடந்ததைபற்றி சிறுமி தனது தாயிடம் சொல்ல, ஹைதரபாத்திலிருந்து சென்னை வந்த சிறுமியின் தாய் கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

  புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்கு செய்த போலீசார் சர்ச் பாதிரியார் உட்பட சிறுமியின் உறவினர்களிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் கீழ்பாக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஹென்றி உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
  \

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: