பேஸ்புக் காதலால் விபரீதம்.. வந்தவாசி அருகே 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

Youtube Video

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 • Share this:
  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. பள்ளியில் படித்து வந்த சிறுமி கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே இருந்துள்ளார்.

  பெற்றோரின் செல்போன் மூலம் அவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக பேஸ்புக் பயன்படுத்தி வந்துள்ளார். அதில், வந்தவாசி அடுத்த இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இலியாஸ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவருடன் சாட்டிங் செய்து வந்த சிறுமியிடம், ஒரு சில நாட்களிலேயே காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அவரின் ஆசை வார்த்தையில் மயங்கிய சிறுமி அவ்வப்போது இலியாஸை வெளியில் சென்று சந்தித்ததாகவும் தெரிகிறது.

  இந்த நிலையில் கடந்த 24-ம் தேதி சிறுமியை வந்தவாசி புறவழிச் சாலையில் உள்ள சவுக்குத் தோப்பு பகுதிக்கு இலியாஸ் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அத்துமீறியதாக தெரிகிறது. பின்னர் தனது நண்பர்களான இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான பர்கத், கீழ் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சூர்யா ஆகியோரை சிறுமிக்கு தெரியாமல் ரகசியமாக போன் செய்து அழைத்துள்ளார்.

  அவர்கள் அங்கு சென்றதும், மூவரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த சவுக்கு தோப்பிலேயே சிறுமியை விட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். சிறுமி உடைகள் கிழிந்த நிலையில், அலங்கோலமாக அழுதுகொண்டே சவுக்குத் தோப்பில் இருந்து வெளியே வந்துள்ளார். அங்கு நின்றவர்கள் சிறுமியை மீட்டு, அவருக்கு உடை வாங்கிக்கொடுத்து, பெற்றோருக்கு தகவல் சொல்லியுள்ளனர்.

  விரைந்து சென்ற பெற்றோர் மகளை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா மற்றும் வந்தவாசி போலீசார் சம்பவ நடந்த சவுக்கு தோப்பு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

  பின்னர் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இலியாஸ், பர்கத், சூர்யா ஆகிய மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  மேலும் படிக்க... புதுச்சேரியில் கொரோனாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ உயிரிழப்பு

  ஆன்லைன் வகுப்புக்காக குழந்தைகள் அனைவர் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கும் கால கட்டத்தில், அவர்கள் அதை படிப்புக்குதான் பயன்படுத்துகிறார்களா என்பதை பெற்றோர் மிகவும் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என உணர்த்துகிறது இந்த சம்பவம்.
  Published by:Vaijayanthi S
  First published: