Home /News /tamil-nadu /

தாம்பரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் கொள்ளை!

தாம்பரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் கொள்ளை!

வீட்டில் நகை, பணம் கொள்ளை

வீட்டில் நகை, பணம் கொள்ளை

பெருங்களத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

  • News18
  • Last Updated :
    தாம்பரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 15 சவரன் தங்க நகை மற்றும் 25 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் சரவணபவன் நகர் முதல் முதல் தெருவில் வசித்து வருபவர் உஷா. இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணாநகரில் உள்ள அவரின் அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று வீடு திரும்பியுள்ளார்.

    வீட்டிற்கு வந்த உஷா உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு துணிகள் கலைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    உடனே இந்த சம்பவம் குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    முதற்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் கெளபார் மூலம் கொள்ளை நடத்தியது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 2019 இன்று இதே மாதத்தில் உஷா வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    Also read... பேராசையின் காரணமாக ரூ.6.5 கோடி பணத்தை இழந்த முன்னாள் அமைச்சரின் மருமகன் - மோசடி செய்த 4 பேர் கைது!

    மேலும் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்ததால் கொள்ளையர்களை
    கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    பெருங்களத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Tambaram

    அடுத்த செய்தி