Home /News /tamil-nadu /

36 மணி நேரத்தில் 15 படுகொலைகள்.. எங்கே போகிறது தமிழகம் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

36 மணி நேரத்தில் 15 படுகொலைகள்.. எங்கே போகிறது தமிழகம் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

கொல்லப்பட்ட ஒருசிலர் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று புகார் கொடுத்தும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் அலட்சியமாக இருந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன - எடப்பாடி பழனிசாமி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    தமிழகத்தில் 36 மணி நேரத்தில் 15 படுகொலைகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை கடந்த 15 மாதங்களில் நான் பலமுறை எடுத்துக் கூறியுள்ளேன். ஆனால், குற்றங்களைத் தடுப்பதில் நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சர் ஆர்வமின்றி, விளம்பர மோகத்தால் திளைத்துள்ளதால் இன்று தமிழகம் முழுவதும் கொலைக் களமாக மாறி வருவது கண்டு மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

    கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைக் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன என்று செய்திகள் வருகின்றன. இந்த கொலைகள் அனைத்தும் ஏதோ எதிர்பாராதவிதமாக நடந்ததாகத் தெரியவில்லை . முன் விரோதம் காரணமாகவும், திட்டமிட்டும் இக்கொலைகள் நடந்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட ஒருசிலர் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று புகார் கொடுத்தும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் அலட்சியமாக இருந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    சட்டம் ஒழுங்கை நானே நேரடியாக கவனித்து வருகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு கூறினார். இதுதான் அவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா? இதன் காரணமாக மக்கள் கொந்தளித்து போயுள்ளனர். இந்த படுகொலை சம்பவங்களுக்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    இதையும் படிங்க: காவலர்கள் தயாராக இருக்கனும்..! - டிஜிபி அலுவலகத்தில் இருந்து பறந்த உத்தரவு

    இனியாவது தமிழக அரசு விழித்துக்கொண்டு கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் பலாத்காரம், போதைப்பொருள் விற்பனை போன்ற சமுதாய சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: AIADMK, Edappadi palanisamy, Tamilnadu government

    அடுத்த செய்தி